யாழ்ப்பாண நூலக e-Library திட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாண பொது நூலகத்தை மின் நூலகமாக (e-library) மாற்றும் திட்டம் இன்று (01) காலை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

இந்த முயற்சியின் பகுதியாக, jaffna.dlp.gov.lk என்ற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், யாழ்ப்பாண பொது நூலகத்தில் உள்ள புத்தகங்களை இனி அனைவரும் ஆன்லைன் வழியாக எளிதில் வாசிக்கலாம்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொகுப்பு கொண்டதாக கருதப்படும் யாழ்ப்பாண பொது நூலகம், யாழ்ப்பாண மக்களின் பெருமையின் அடையாளம். தினமும் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இங்கு வந்து பயன்பெற்று வருகின்றனர்.

மேலும், ஒருங்கிணைந்த நூலக முகாமைத்துவ அமைப்பு, ஸ்மார்ட் அட்டை பிரவேசம், மற்றும் விசேட தேவையுடையோருக்கான உதவி தொழில்நுட்ப வசதி கொண்ட சிறப்பு அலகும் இந்த நிகழ்வில் திறந்து வைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்திற்காக 2025 வரவு-செலவுத் திட்டத்தில் 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாநகர ஆணையாளர், நூலகர் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

(Tamil Craze)

Scroll to Top