ஹராரேவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், மெதுவான ஓவர் வீச்சு (slow over-rate) காரணமாக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி, அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள் இலக்கு ஓவர்களை பூர்த்தி செய்யாமல், ஒரு ஓவர் பின்தங்கியதாக Match Referee Jeff Crowe (ICC Elite Panel) அறிவித்தார். அதன்படி, அணி வீரர்களின் போட்டி கட்டணத்தில் 5% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ICC விதிமுறைகளின்படி, ஒரு ஓவர் பின்தங்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வீரர்கள் தங்களின் போட்டி கட்டணத்தின் 5% அபராதம் செலுத்த வேண்டும்.
இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்க குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு தண்டனையை ஏற்க சம்மதித்ததால், தனித்த hearing நடத்த வேண்டிய அவசியம் இல்லை.
இந்த குற்றச்சாட்டை, மைதான நடுவர்களான Iknow Chabi, Richard Kettleborough, மூன்றாம் அம்பயர் Percival Sizara மற்றும் நான்காம் அம்பயர் Forster Mutizwa முன்வைத்தனர்.
(Tamil Craze)