Asia Cup 2025: இன்று தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (செப்டம்பர் 9) ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) தொடங்குகிறது. இந்த தொடர் செப்டம்பர் 28 வரை நடைபெறும். மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி T20 வடிவில் நடத்தப்படுகிறது.

A பிரிவு – இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), ஓமன்
B பிரிவு – வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங்

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் ஃபோர்ஸ் (Super Fours) சுற்றுக்கு முன்னேறும். அங்கிருந்து சிறந்த இரண்டு அணிகள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

ஆசிய கோப்பை 2025 உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களை சென்றடைய பல்வேறு ஒளிபரப்பு மற்றும் இணைய தளங்களில் ஒளிபரப்பப்படும்.

இந்தியாவில்: Sony Sports Network சேனல்கள் (Sony Sports 1, 3, 4, 5). ஆன்லைன் ஸ்ட்ரீமிங் – SonyLIV

இலங்கையில்: Sirasa TV, TV-1. ஆன்லைன் ஸ்ட்ரீமிங் – Dialog ViU

சர்வதேச ரசிகர்களுக்காக: SonyLIV மற்றும் Sony நிறுவனத்தின் பன்னாட்டு ஒளிபரப்பு ஒப்பந்தங்கள் வழியாக நேரடி ஒளிபரப்பு வசதி.

இந்த ஆசியக் கோப்பை தொடர், அதிரடி, பரபரப்பு, சுவாரஸ்யம் அனைத்தையும் ஒருங்கே கொண்டு ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கப்போகிறது.

(Tamil Craze)

Scroll to Top