இலங்கை : கொழும்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாழும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.
தேசிய குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்திருப்பதன்படி செப்டம்பர் 18, வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நீர் வழங்கல் துண்டிக்கப்படும்.
இதற்கு காரணம் – அம்பத்தளே குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் முக்கிய பம்ப் நிலையத்தில் ஏற்பட்ட மின் தடங்கல். அதனால் நீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படவுள்ளது.
பாதிக்கப்படும் பகுதிகள்
கொழும்பு 01–15
பத்தரமுல்ல, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட
கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல
கொலன்னாவ, IDH, கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை
மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, இரத்மலானை மற்றும் மொரட்டுவை
நீர் வழங்கல் துண்டிப்பு நேரத்தில் சிரமம் ஏற்படாமல் இருக்க, குடியிருப்பவர்கள் முன்கூட்டியே தேவையான அளவு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு NWSDB அறிவுறுத்தியுள்ளது.
(Tamil Craze)