Apple நிறுவனம் வருடாந்திர iPhone அறிமுக விழாவை இன்று நடத்துகிறது. உலகம் முழுவதும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த நிகழ்ச்சி காலை 10 மணி (PT) தொடங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் நேரம் 10.30 PM IST / SLST ஆகும்.
என்ன எதிர்பார்க்கலாம்?
புதிய iPhone 17 சீரிஸ் – இன்னும் சுருங்கிய (slimmer) வடிவம், மேம்பட்ட கேமரா மற்றும் வேகமான சிப்.
Apple Watch Series 11 – புதிய சென்சார்கள் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள்.
AirPods Pro 3 – மேம்பட்ட noise cancellation மற்றும் புதிய வடிவமைப்பு.
“Awe Dropping” அழைப்பு
ஆகஸ்ட் 26-ஆம் தேதி Apple வெளியிட்ட அழைப்பிதழில் “awe dropping” என்ற தலைப்பும், Siri நிறங்களை பிரதிபலிக்கும் Apple லோகோவும் காணப்பட்டது. Apple.com-ல் லோகோவை நகர்த்தினால், நீல நிறத்திலிருந்து ஆரஞ்சு வரை மாறும் இன்டர்ஆக்டிவ் டிசைன் காணப்படுகிறது. இது iOS 26-இல் வரும் Liquid Glass design-ஐ குறிக்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
எங்கு மற்றும் எப்படி பார்க்கலாம்
இந்த முக்கிய நிகழ்ச்சி Apple Park, Cupertino, California-ல் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியை நேரடியாக Apple.com, Apple TV, அல்லது YouTube Apple Events channel மூலம் காணலாம்.
(Tamil Craze)