IPL-இல் இருந்து Retirement – Ashwin to Play in Overseas Leagues

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக, முன்னாள் நட்சத்திர சுழல்வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது IPL பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், இனி IPL-இல் விளையாடமாட்டேன் என்றும், வெளிநாட்டு பிராஞ்சைஸ் லீக்குகளில் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடரப்போவதாகவும் உறுதி செய்துள்ளார்.

IPL பயணத்தின் நிறைவு

2009-ஆம் ஆண்டு IPL-இல் அறிமுகமான அஷ்வின், கடந்த 16 ஆண்டுகளில் 221 போட்டிகளில் பங்கேற்று 187 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 7.20 எனும் சிறந்த எகானமி ரேட் மூலம், IPL வரலாற்றில் நிலையான இடம் பெற்ற பந்துவீச்சாளராக உயர்ந்தார்.

அவர் CSK, ராஜஸ்தான் ராயல்ஸ் (RR), பஞ்சாப் கிங்ஸ் (PBKS), டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC), ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் (RPSG) உள்ளிட்ட பல அணிகளுக்காக விளையாடியுள்ளார். மேலும், 2018 மற்றும் 2019 சீசன்களில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாகவும் இருந்தார்.

வெளிநாட்டு லீக்குகளுக்கான வாய்ப்பு

செயலில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு IPL தவிர வெளிநாட்டு பிராஞ்சைஸ் லீக்குகளில் விளையாட அனுமதி இல்லை. ஆனால், IPL ஓய்வை அறிவித்துள்ளதால், அஷ்வின் தற்போது அந்த தடையை கடந்து, உலகம் முழுவதும் நடைபெறும் T20 மற்றும் பிற லீக்குகளில் பங்கேற்க முடியும்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகிய பின்னர்

முன்னதாக, 2024-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் தொடரின் போது, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். இப்போது IPL பயணத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதால், அவரது அடுத்த கட்ட கிரிக்கெட் பயணம் வெளிநாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Tamil Craze)

Scroll to Top