Apple தனது புதிய தலைமுறை iPhone 17 series-ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max மற்றும் முற்றிலும் புதிய iPhone 17 Air ஆகியவை அறிமுகமாகியுள்ளன.
திரை மற்றும் வடிவமைப்பு
iPhone 17, முந்தைய மாடலை ஒத்த design-ஆ இருந்தாலும், சில முக்கியமான display மேம்பாடுகளை கொண்டுள்ளது. புதிய 6.3-இஞ்ச் OLED panel உடன் வரும் இந்த மாடல், மிகவும் மெலிந்த bezels மற்றும் 3000 nits peak brightness-ஐ வழங்குகிறது. இதன் மிகப்பெரிய சிறப்பு, ProMotion 120Hz refresh rate ஆகும். இது visuals மற்றும் gaming அனுபவத்தை மேலும் smooth ஆக மாற்றுகிறது.
கேமரா மேம்பாடுகள்
இந்த முறை முன்புற கேமரா 24MP ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது, இதனால் selfies மற்றும் video calls மிகவும் தெளிவாக கிடைக்கின்றன. பின்புற dual camera அமைப்பு முந்தைய மாடலைப் போலவே உள்ளது. அதேசமயம் Action Button மற்றும் Camera Control Button தொடர்கிறது, இதன் மூலம் productivity மற்றும் photography இன்னும் எளிமையாகிறது.
செயல்திறன் மற்றும் மென்பொருள்
iPhone 17, புதிய A19 Bionic chip மற்றும் iOS 26-இல் இயங்குகிறது. இதில் AI அடிப்படையிலான பல புதிய வசதிகள் உள்ளன, அவை note summaries, photo background clean-up மற்றும் custom image generation ஆகும். Battery life-இலும் பெரும் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட 8 மணி நேரம் கூடுதலாக streaming செய்ய முடியும். மேலும், 20 நிமிடங்களில் 50% வரை fast charge ஆகும்.
நிறங்கள் மற்றும் விலை
iPhone 17, Lavender, Mist Blue, Sage, Black மற்றும் White ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. விலை $799 முதல் தொடங்குகிறது.
(Tamil Craze)