யாழ்ப்பாணம் மண்டைதீவில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதான கட்டுமானப் பணிகள் இன்று (01) அதிகாரப்பூர்வமாக தொடங்கின. இந்தத் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழா இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திட்டம், வடமாகாண விளையாட்டு முன்னேற்றத்துக்கு புதிய திசையை உருவாக்கும் எனக் கருதப்படுகிறது.
விழா நிகழ்வின் போது, ஜனாதிபதி, இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷம்மி சில்வாவிடம் மைதானம் எப்போது தயாராகும் என்று நேரடியாகக் கேட்டார். அதற்கு அவர், வரும் டிசம்பர் மாதத்திற்குள் முதல் உள்ளூர் போட்டி நடத்தப்படும் என்றும், மூன்று ஆண்டுகளுக்குள் சர்வதேச போட்டி நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தேசிய கிரிக்கெட் அணியில் சிங்களம், தமிழ், முஸ்லீம் சமூகங்களை ஒருங்கிணைத்து பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் ஜனாதிபதி பொதுமக்களிடம் பகிர்ந்துகொண்டார்.
(Tamil Craze)