துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனம் Wayfarer Films மூலம் வெளியான ‘லோகா – Chapter 1’, ஓணம் பண்டிகை ரிலீஸாக திரைக்கு வந்தது. இப்படத்தில் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டோமினிக் அருண் இயக்கிய இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, கல்யாணியின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.
தொடர்ச்சியான வரவேற்பின் காரணமாக படத்தின் திரைகள் அதிகரித்து, வசூலில் மாபெரும் சாதனையை எட்டியுள்ளது. உலகளவில் ரூ.202 கோடி வசூல் செய்த லோகா, ரூ.200 கோடியைத் தாண்டிய முதல் மலையாள நடிகை ஹிட் படமாகவும், கல்யாணி பிரியதர்ஷனுக்கு வரலாற்றுச் சாதனையாகவும் மாறியுள்ளது.
இதன் மூலம், லோகா Chapter 1 மலையாள சினிமாவின் வரலாற்றில் ஒரு சிறப்பு மைல்கல்லை பதித்துள்ளது.
(Tamil Craze)