தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இன்னும் சிறப்பு இடம் பிடித்து நிற்கும் படம் தான் 1999-ல் வெளியான ‘படையப்பா’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இந்த படம், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி அப்போது வசூலில் பெரும் சாதனைகள் படைத்தது.
இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்தனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த பாடல்கள் இன்று கூட ரசிகர்களின் பிளேலிஸ்டில் இருக்கிறது. “மின்சாரக்கண்ணா”, “வெற்றி கொடி கட்டு” போன்ற பாடல்கள் இன்றும் evergreen ஹிட்!
வெளியான காலத்தில் வசூல் சாதனைகளுடன், South Filmfare Awards மற்றும் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வென்ற இப்படம், இன்னும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இப்படத்தை இயக்கிய கே.எஸ். ரவிக்குமார், “Padayappa படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும்” என்று சமீபத்தில் அறிவித்துள்ளார். இந்த அப்டேட் வெளியாகியதும், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமாக ரியாக்ட் செய்து வருகிறார்கள். பலரும் “மீண்டும் theatre-ல் padayappa பாக்கணும்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
மொத்தத்தில், ‘Padayappa’ மீண்டும் திரையரங்கில் திரையிடப்படப்போகிறது என்ற செய்தி ரசிகர்களிடையே ஒரு nostalgic கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
(Tamil Craze)