பொங்கல் 2026 திரையுலகில் மிகப்பெரிய திருவிழாவாக மாறவிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அரசியல் த்ரில்லர் Parasakthi ஜனவரி 14 அன்று வெளியாகிறது என்று குழுவினர் அறிவித்துள்ளனர். இதே சமயம், தளபதி விஜய்யின் அரசியல் நுழைவிற்கு முன்பான கடைசி படமாகக் கருதப்படும் Jana Nayagan ஜனவரி 9 வெளியீடாக ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஒரே வாரத்தில் விஜய்–சிவகார்த்திகேயன் படங்கள் நேருக்கு நேர் மோதவுள்ளன.
Parasakthi படத்தின் போஸ்டரில் கையில் குண்டை பிடித்து எறியத் தயாராக நிற்கும் சிவகார்த்திகேயனின் தோற்றம், பின்புலத்தில் புகை மூட்டும் ரயில் என அனைத்தும் பெரிய அரசியல் திரில்லர் உணர்வை ஏற்படுத்துகின்றன. இதில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரிலீலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் தலைப்பு ஆரம்பத்திலேயே சர்ச்சையை சந்தித்தது. நடிகர்–இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, Parasakthi என்ற பெயர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறினார். ஆனால் பின்னர் Dawn Pictures, தமிழ் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கங்களின் அதிகாரப்பூர்வ கடிதங்களை வெளியிட்டு, அந்த தலைப்பு தங்களுக்கே உரியது என்பதை உறுதிப்படுத்தியது. இதன் மூலம் சர்ச்சை அடங்கிய நிலையில், தற்போது படம் வெளியீட்டு தேதியுடன் தயாராகியுள்ளது.
மற்றுபுறம், தளபதி விஜய்யின் Jana Nayagan Pongal வெளியீடாக வருவதால், ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது. விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முன் வெளியாகும் கடைசி படம் என்பதால், எதிர்பார்ப்பு அசாதாரணமாக உயர்ந்துள்ளது.
இதனால், ஜனவரி 2026 பொங்கல் திருவிழா, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு அபூர்வமான திரையரங்கு அனுபவத்தை வழங்கப்போகிறது.
(Tamil Craze)
பராசக்(தீ) பரவட்டும்🔥🔥 https://t.co/FWrgwGTqIK#Parasakthi in Theatres from #Pongal 14th January 2026@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14 @dop007 @editorsuriya @supremesundar
— Sudha Kongara (@Sudha_Kongara) September 12, 2025