மாணவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோருக்கான விசா விதிமுறைகளில் அமெரிக்க அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு குடியேற்ற சட்டங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவில் தங்கும் மாணவர்கள், ஊடகவியலாளர்கள், கலாசார பரிமாற்ற பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கான விசா நடைமுறைகளும் மாற்றப்பட்டுள்ளன.
இதுவரை மாணவர் விசா பெற்றவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் வரையிலும் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் புதிய விதிமுறைகளின்படி, இனிமேல் அவர்கள் குறிப்பிட்ட காலக்கெடு வரை மட்டுமே அமெரிக்காவில் தங்க முடியும்.
புதிய விதிமுறைகள்:
மாணவர்கள்: அதிகபட்சம் 4 ஆண்டுகள் தங்க அனுமதி.
ஊடகவியலாளர்கள்: 240 நாட்கள் தங்க அனுமதி.
சீன ஊடகவியலாளர்கள்: வெறும் 90 நாட்களே அனுமதி.
மாணவர் விசா சலுகைக் காலம்: படிப்பு முடிந்த பிறகு முன்பு இருந்த 2 மாத அனுமதி தற்போது ஒரு மாதமாகக் குறைக்கப்பட்டது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் எதிர்காலத்துக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என குறிப்பிடப்படுகிறது.
(Tamil Craze)