TVK தலைவர் விஜய், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை “Uncle” என கூப்பிட்டதில் எந்த தவறும் இல்லை என்று பிரபல இயக்குநர் K.S ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் நடைபெற்ற ஒரு தனியார் உணவக திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர், ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“எனக்கு அரசியலோட சம்பந்தமே இல்லை. விஜய் Uncle என சொன்னது தப்பா எனக்குப் படவில்லை. நிஜத்துலயும் அவர் நம்மள பாத்தா, ‘Good Morning Uncle… எப்படி இருக்கீங்க?’ன்னு தான் சொல்வாரு. அதை இப்ப public-ஆ சொல்லிருக்காரு. அதுக்கு வேற அர்த்தம் போடணும் தேவையில்லை.
நானே ஸ்டாலின் அவர்களை நிறைய தடவை சந்திச்சிருக்கேன். அப்போது கூட வணக்கம் Uncle தான் சொல்வேன். அதுல எந்த தவறும் இல்லை. தமிழ்ல மாமான்னு சொன்னா தான் தவறாக இருக்கும்.
விஜய் கொஞ்சம் commercial-ஆ தனது audience-க்காகச் சொல்லியிருக்கலாம். அதிலே குறை சொல்லக்கூடிய வார்த்தையே கிடையாது.” என்று ரவிக்குமார் விளக்கம் அளித்தார்.
(Tamil Craze)